Thursday, 13 February 2020

Tamil Kavithai | தமிழ் கவிதை

சொல்லும் சொல், ஆக்கமும் தரும். கேடும் தரும்.

பணக்காரனாய் இருந்தும் கருமியாய் இருப்பவன் ஏழை.

நல்லவர்கள் ஏதும் செய்யாமல் இருப்பதால் தீமை வளர்கிறது.

துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்.

ஓடுவதற்கு முன் நடப்பதற்கு பழகிக் கொள்.

பகிர்ந்த துன்பம் பாதியாகிறது.

நீ பேசும் அளவைக் காட்டிலும் இருமடங்கு கூர்ந்து கேள்.

திறமையான தச்சன் குறைந்த வெட்டுகளையே வெட்டுகிறான்,

தயக்கம் தவறான செய்லகளை விட எப்போதும் மோசமானது.

திறந்திருக்கும் கதவு ஒரு துறவியைக் கூட தீமை செய்ய தூண்டும்.

சொற்கள் வாள்களை விட அதிகம் வெட்டுகின்றன.

மென்மையான சொல் இரும்பு வாசலைத் திறக்கிறது.

எங்கே சேர்த்து வைக்க முடியுமோ அதைத் துண்டிக்காதே.

பெரிய துரதிர்ஷ்டம் நேர்மைக்கு சவால்.

நூறு ஆசிரியர்கள் ஒரு தந்தைக்கு இணையாக முடியாது.

களைப்புதான் சரியான தலையணை.

நல்ல மனசாட்சிதான் கடவுளின் கண்.

கடன் மிக மோசமான வறுமை.

கற்றுக்கொள்வதற்கு ஒரு போதும் தாமதம் இல்லை.

கற்பிக்காத தெரிந்தவன் கற்றலை நிறுத்தக் கூடாது.

நாளைய தினத்தைக் குறைவாக நம்பு, இன்றைய தினத்தை அனுபவி.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

கீழ்ப்படிதல் மட்டுமே கட்டளையிடும் உரிமையை அளிக்கும்.

உடல் நலமுள்ள ஏழை பாதி பணக்காரன்.

எல்லாம் இழந்தாலும், எதிர்காலம் இன்னும் இருக்கிறது.

எப்போதும் கூட்டத்திலே யாருக்கும் புத்திமதி கூறாதே.

சொர்க்கமும் நரகமும் உன்னுடைய இதயத்தில் இருக்கிறது.

அகல உழுவதை விட ஆழ உழுவதே மேலானது.

உழைப்பு எல்லாவற்றையும் வெல்கிறது.

ஆர்வம் பிடிக்கப்படுகிறது, கற்றுத் தரப்படுவதில்லை.

எப்படி பிறந்தோமோ அப்படியே இறப்பது இயற்கை.

பேசும் முன் இரண்டு தரம் யோசி.

சிறிதளவு ஊக்கம் ஒரு பெரிய சாதனையின் துவக்கமாகும்.

உண்மையான மனிதனை அவன் தனித்திருக்கும் பொது அறியலாம்.

வறுமையில் நிறைவு காண்பவனே மிகப்பெரிய பணக்காரன்.

No comments:

Post a Comment

Featured Post

Kadhalar Dina Kavithaigal 2020

Valentine's day Tamil kavithai | Kadhalar Dina Kavithaigal 2020 ஒருமுறை பிறந்தேன் உலகை காண்பதற்கு அல்ல உன் அழகை காண்பதற்கு. ஒருமு...